அத்திரவரதரை தரிசிக்க வரும் பக்தர்களை ஒழுங்குப்படுத்த கூடுதல் பணியார்களை நியமித்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. அத்திவரதரை தரிசிக்க, தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கல் காஞ்சிபுரம் வருகின்றனர். இதனால் கோயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை முறைப்படுத்த, பணியாளர்களின் தேவை அதிகரித்துள்ளது.
இந்த பணிகளுக்காக பல்வேறு கோயில்களில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்களை நியமனம் செய்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பணியாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இந்து சமய அறநிலையத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
Discussion about this post