மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. ஆடிப்பட்டம் தேடி விதை என்ற முன்னோர்களின் வாக்கின்படி, ஆடி மாதம் விதை விதைத்து நாற்று நட்டு விவசாய பணிகளை மேற்கொள்ளவும், தங்கள் நிலங்களில் பயிர் விளைச்சல் அதிகரிக்க வேண்டியும் இறைவனை வழிபாடு செய்வது வழக்கம். அந்தவகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றம் விமர்சையாக நடைபெற்றது.
அம்மன் சன்னதியில் முன்புள்ள கொடிமரம் முன்பு, மீனாட்சி அம்மன் பல்லக்கில் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
Discussion about this post