காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 எம்.பிக்கள், கட்சியின் கொறடா உத்தரவையும் மீறி முத்தலாக் மசோதா மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தது அக்கட்சித் தலைமையை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
முத்தலாக் தடை திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இதில் 5 காங்கிரஸ் எம்.பிக்கள் கட்சி கொறடாவின் உத்தரவையும் மீறி வாக்கெடுப்பில் பங்கேற்காமல், மசோதாவிற்கு மறைமுக ஆதரவளித்துள்ளனர். இதனால் அதிருப்தியடைந்துள்ள கட்சியின் தலைமை, எம்பிக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக எதிர்கட்சி அந்தஸ்த்தை கூட பெற முடியாமல் உள்ள நிலையில், தனது சொந்த உறுப்பினர்கள் தலைமை மீது வைத்துள்ள மதிப்பையும் இழந்து தத்தளித்து வருவதாக விமர்சனம் தற்போது எழுந்துள்ளது.
Discussion about this post