ரோகித் சர்மாவுக்கும் எனக்கும் எந்த மோதலும் இல்லை என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி விளக்கமளித்துள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி அரையிறுதியில் தோற்ற பின், அணிக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், ரோகித் சர்மாவின் ஆலோசனையை விராட் கோலி ஏற்காததால், இருவருக்கு கருத்து மோதல் ஏற்பட்டதாக தகவலகள் வெளியாகின.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி, இது உண்மையெனில் நாங்கள் விளையாட்டில் சிறப்புடன் செயல்பட்டிருக்க முடியாது என்று கூறினர். எனக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அதனை எனது முகத்தில் அல்லது எனது நடவடிக்கைகளில் நீங்கள் காண முடியும் என்று தெரிவித்தார்.
நான் ரோகித் பற்றி எப்பொழுதும் புகழ்ந்து மட்டுமே பேசி வந்துள்ளதாக கூறிய அவர், அவருக்கு அந்த தகுதி உள்ளது என நான் நம்புவதாகவும், எங்களுக்குள் எந்த கருத்து மோதலும் இல்லை என விளக்கம் அளித்தார்.
Discussion about this post