நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி கவுன்சிலின் 36 வது கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று நடைபெறவுள்ளது.
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி மின்சார வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 12%ல் இருந்து 5% ஆக குறைப்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. ஜூலை 25 ஆம் தேதியன்று ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற இருந்தது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவை விவாதத்தில் பங்கேற்பதற்காக சென்று விட்டதால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இன்று வீடியோ கான்பரசிங் மூலம் நடைபெறும் கூட்டத்தில், மின்சார வாகனங்கள் மீதான ஜி.எஸ்,டி வரி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
Discussion about this post