அன்சருல்லா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 16 பேரையும் எட்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்ட அன்சருல்லா அமைப்பைச் சேர்ந்த 16 பேரை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களில் 14 பேர் சவுதி அரேபியாவில் ரகசியமாக செயல்பட்டு வந்ததும், நாகப்பட்டிணம் பகுதியைச் சேர்ந்த 2 பேர் இந்த அமைப்பிற்கான நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து கடந்த திங்களன்று இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் 16 பேரையும் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்பிற்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பகுதிகள் மற்றும் இந்த அமைப்புடன் தொடர்புடைய மற்றவர்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் எனத் தெரிகிறது.
Discussion about this post