தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட சந்திராயன்-2 விண்கலத்தை வரும் 21 அல்லது 22ந்தேதிகளில் மீண்டும் விண்ணுக்கு ஏவ திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நிலவை ஆய்வு செய்ய சந்திராயன்-2 விண்கலத்தை இஸ்ரோ தயாரித்து வந்தது. நிலவின் தென் துருவ பகுதியை உலகில் முதன் முறையாக, ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக இஸ்ரோ அறிவித்திருந்த நிலையில், சந்திராயன் 2 விண்கலம், அறிவித்தப்படி கடந்த 15ந்தேதி அதிகாலை 2:51க்கு விண்ணில் செலுத்தும் வகையில், கவுன்டவுன் தொடங்கியது. இந்நிலையில் திடீரென்று கடைசி நேரத்தில் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து விண்கலத்தை விண்ணில் செலுத்துவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரோ, கோளாறு விரைவில் சரி செய்யப்பட்டு விண்ணில் செலுத்தும் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தது. அதை தொடர்ந்து விண்கலத்தை ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இஸ்ரோவின் முக்கிய அதிகாரிகள் பங்கு பெறும் கூட்டத்தில் சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் செலுத்தும் தேதி முடிவு செய்யப்படும் என கூறப்பட்ட நிலையில், இம்மாதம் 21 அல்லது 22 ஆம் தேதிகளில் ஏவப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Discussion about this post