தமிழகத்தில் அக்டோபர் மாத இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்படும் என மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஜெய்சுகின் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் பதில் அளிக்கப்பட்டது. அதில், வார்டு மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், வரும் அக்டோபர் மாதம் 31ஆம் இறுதிக்குள் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் உறுதிபட தெரிவித்தது.
இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் கால அவகாசம் கோரிய தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வழக்கை முடித்து வைத்தது.
Discussion about this post