எல்லையில் இருந்து போர் விமானங்களை திரும்ப பெறும் வரை தங்கள் எல்லைக்குள் இந்திய விமானங்களை அனுமதிக்க முடியாது என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
எல்லைப் பகுதிகளிலிருந்து போர் விமானங்களை திரும்ப பெறாத வரை இந்திய விமனங்கள் தங்கள் வான் எல்லைக்குள் செல்ல அனுமதிக்க முடியாது என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அத்த்துடன் இந்திய விமானங்கள் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடைய வரும் 26 ஆம் தேதி வரை நீடித்தது, இத்துடன் 5-வது முறையாக தடைக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் விமான போக்குவரத்து செயலாளர் நஸ்ரத் கூறுகையில் எல்லைப் பகுதியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள விமான படைக்கு சொந்தமான விமானங்களை திரும்ப பெறுமாறு இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டோம் அதுவரை இந்திய விமானங்களை பாகிஸ்தான் வான் பகுதியில் நுழைய விட மாட்டோம் என்றார். இதைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து புறப்படும் விமானங்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.
Discussion about this post