நாமக்கல்லில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் நடைபெற்ற ஏலத்தில் பருத்தி அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
நாமக்கல்லில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் வாரம் தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும். அதன்படி நடைபெற்ற ஏலத்தில் நாமக்கல், புதுசத்திரம், அம்மாபாளையம் புதூர், நாட்டாமங்கலம், கல்யாணி,உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பருத்தி முட்டைகளை விற்பனை கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் கடந்த வார விலையை விட இந்த வாரம் பருத்தியின் விலை குவிண்டால் ஒன்றுக்கு 500 ரூபாய் வரை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயிகள் கொண்டு வந்த 900 முட்டை பருத்திகள் சுமார் 16 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு ஏலம் போனது. ஏலம் முடிந்து எடை போட்ட பின்னர் அனைவருக்கும் உடனடியாக பணம் வழங்கப்பட்டது.
Discussion about this post