சாயல்குடியில் திமுகவைச் சேர்ந்த குத்தகைதாரர், ஒப்பந்த ஏலம் எடுத்த இடத்தை தாண்டி, வாடகை வாகனங்களை நிறுத்தியவர்களை மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் வாடகை வாகன நிறுத்தமும், வாரச்சந்தை நடத்தும் இடமும் அருகருகே உள்ளது. இதில் வாரச்சந்தையை குத்தகை ஏலம் எடுத்த திமுக பிரமுகர் முருகன், லாப நோக்கில் வாடகை வாகனங்கள் நிறுத்தும் இடங்களையும் ஆக்கிரமித்து கடைகளை விரித்து இடையூறு செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அருகிலேயே அரசு மருத்துவமனையும் இருப்பதால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக தெரிகிறது. இதனிடையே திமுக குத்தகைதாரர் முருகன், வாடகை வாகனங்களை நிறுத்தியவர்களை சரமாரியாக மிரட்டியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து வாடகை வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் திமுக பிரமுகர் முருகன் மீது புகாரளித்துள்ளனர்.
Discussion about this post