பொள்ளாச்சியில் மத்திய கயிறு வாரியம் சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தும் விதமாக மராத்தான் போட்டி நடைபெற்றது.
பொள்ளாச்சியில், தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வை வலியுறுத்தும் விதமாக மராத்தான் ஓட்டம் நடைபெற்றது. மத்திய கயிறு வாரியம், கயிறு தொழில்முனைவோர் சங்கம் நடத்திய இந்த போட்டி மகாலிங்கபுரம் அலுவலகத்தில் தொடங்கி, பி.ஏ கல்லூரியில் நிறைவுபெற்றது. இதனை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடங்கி வைத்தார்.
10 வயதுக்கு கீழ்,19 வயதிற்கு கீழ் மற்றும் 19 வயதிற்கு மேல் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஆண் பெண் என இருபாலருக்கும் தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன. 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகையும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
Discussion about this post