தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில், மீனவர்களுக்கு செயற்கைகோள் தொலைத்தொடர்பு கருவிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.
ஆழ்கடல் மீனவர்களுக்கு உதவும் விதமாக, ஐசாட் செயற்கைகோள் தொலைதொடர்பு கருவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளத்தில் நடைபெற்றது. இதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு 22 விசைப் படகுகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில், ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் பலரும் பங்கேற்றனர். தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் 3 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பில், 100% மானியத்தில் வழங்கப்படும் இந்த ஐசாட்போன் மூலம், தொலைதூரத்தில் இருந்தும் கரையிலிருக்குபவர்களுக்கு தகவல் தெரிவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post