அதிமுக இயக்கத்தை பிரிக்க இணைந்தவர்களின் கனவு தவிடு பொடியாகி விட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தென்காசியில் 20 ஆயிரம் தொண்டர்கள் இணைப்பு விழாவில் பேசிய அவர், அமமுக கூடாரம் காலியாகி வருவதாக தெரிவித்தார்.
மக்களவை தேர்தலில் ஆசை வார்த்தைகளை கூறி திமுக வெற்றி பெற்றதாக தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வர உள்ள உள்ளாட்சி மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியை ஈட்ட அதிமுக தொண்டர்கள் பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்
திமுக ஒரு குடும்ப கட்சி என்றும் அதிமுக ஒரு மக்கள் இயக்கமென்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினால் ஒருபோதும் முதலமைச்சராக முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
அதிமுக அரசு, தொலைநோக்கு சிந்தனையுடன் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டிய முதலமைச்சர், தென்காசியை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்தார்.
Discussion about this post