உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால், கேரட் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான, குந்தா, அவலாஞ்சி, ஏமரால்டு, நடுவட்டம் உள்ளிட்ட பகுதிகளில், காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது. ஜூன், ஜூலை மாதங்களில் பெய்யக்கூடிய தென்மேற்கு பருவமழையின் அளவு இந்தாண்டு குறைவாக பெய்த நிலையில், தற்போது பெய்து வரும் சாரல் மழை விவசாயத்திற்கு ஏற்றதாக உள்ளதால், கேரட், உருளை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேகமூட்டங்களுடன் கூடிய குளிர் நிலவி வருகிறது.
Discussion about this post