சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களில் 7 பேரை சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சூடானில் 30 ஆண்டுகளாக அதிபராக இருந்த ஒமர் அல் பஷீருக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் அவரை கைது செய்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த நிலையில், மக்களாட்சியை கொண்டு வர வலியுறுத்தி கார்டூம் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டக்காரர்கள் மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். 200 பேர் படுகாயம் அடைந்தனர். 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து, கார்டூம் நகரில் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Discussion about this post