நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த புதுப்பள்ளியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதி விவசாயிகளுக்கு தக்கைப் பூண்டு விதை வழங்கும் நிகழ்ச்ச்சி நடைபெற்றது.
நாகை மாவட்டம் புதுப்பள்ளி கிராமம் கஜா புயலால் பாதிக்கப்பட்டு, கடல் நீர் உள்ளே புகுந்தது. அதனால் விவசாய நிலங்கள் உப்பு நிலங்களாக மாறின. எனவே, அவற்றில் எந்த ஒரு பயிரையும் பயிரிட முடியவில்லை. இதனை அறிந்த தொண்டு நிறுவனங்கள், முதற்கட்டமாக ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மூன்று டன் தக்கைப் பூண்டு விதைகளை அப்பகுதி விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கின. தக்கை பூண்டு விதைப்பதன் மூலம், உப்பு நிலங்கள், விளை நிலமாக மாறிவிடும் என்பதால், ஒரு குடும்பத்திற்கு தலா 20 கிலோ தக்கை பூண்டு வழங்கப்பட்டுள்ளது. ஜேசிபி மூலம் நிலங்கள் சீர் செய்யப்பட்டது. தக்கை பூண்டு விதைக்கப்பட்டது. இதில் தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
Discussion about this post