கிருஷ்ணகிரி பழைய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகேயுள்ள மைதானத்தில் ஏராளமான ஓட்டுநர் உரிமங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராயக்கோட்டை பழைய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்ளது. அப்பகுதியில் ஏராளமான வாகன ஓட்டுநர் பயிற்சி மையங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் இதற்கு அருகே உள்ள கோயில் நிலத்தில் இருந்து ஏராளமான ஓட்டுநர் உரிமங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. ஏற்கனவே அப்பகுதியில் ஏராளமான ஓட்டுநர் உரிம அடையாள அட்டைகள் கண்டெடுக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. போலியாக தயாரிக்கப்பட்டதா அல்லது காலாவதியான அடையாள அட்டையா என விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Discussion about this post