தமிழக சட்டப் பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்க அலுவல் ஆய்வு கூட்டம் ஜூன் 24ஆம் தேதி நடைபெறுகிறது.
துறைவாரியான மானிய கோரிக்கை விவாதத்திற்காக வரும் 28ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது. இந்நிலையில் இந்த கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்வதற்கான அலுவல் ஆய்வு கூட்டம் வரும் 24ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெறும் அலுவல் ஆய்வு கூட்டத்தில் சட்டப்பேரவையில் இடம்பெற்று இருக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். வழக்கமாக மானிய கோரிக்கை விவாதத்திற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் 30 நாட்களுக்கு மிகாமல் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post