வேலூர் அருகே மழை நீரை சேகரித்து, அந்த நீரை கொண்டு சொட்டுநீர் பாசனம் மூலம் ஏராளமான மரங்களை கொண்ட ஒரு சிறிய காட்டையே உருவாக்கியுள்ளார் சமூக ஆர்வலர் ஒருவர்.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த தெக்குப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர், ஞானசூரியபகவான். விவசாய பட்டப்படிப்பு முடித்து தமிழக அரசு பணியில் விவசாய அலுவலராக பணி புரிந்தார். அதைத் தொடர்ந்து அகில இந்திய வானொலியில், 18 ஆண்டுகளாக பணியாற்றிய இவர், விவசாயத்தின் மீதான பற்றால், வேலையை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அவருக்கு சொந்தமான இடத்தில் சுமார் ஆயிரத்து 100 மரங்களை நடவுசெய்து அதில் 100க்கும் மேற்பட்ட மருத்துவம் குணம் கொண்ட மரவகைகளை பராமரித்து வருகிறார். 70 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மழைநீர் சேகரிப்பு தொட்டியை அமைத்து அதன்மூலம் கிடைக்கும் நீரை கொண்டு சொட்டு நீர் பாசனத்தில் செடிகளை வளர்த்து வருகிறார். இது மட்டுமல்லாமல் ஒரு அமைப்பை உருவாக்கி, பல்வேறு கிராமங்களுக்குச் சென்று மழைநீர் மற்றும் பாலாற்று படுகையில் உள்ள நீர் நிலைகளை பராமரிப்பது எப்படி என்றும் குளங்கள் ஓடைகளை பராமரித்து வைக்க வேண்டுமென்று விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்திவருகிறார்.
Discussion about this post