கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு பரிசு பெட்டகம் வழங்கப்பட்டது.
கர்ப்பிணிகளை காப்பதில் இந்தியாவிற்கு முன்மாதிரியாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. 6 ஆயிரம் ரூபாயில் ஆரம்பித்த நிதியுதவி தற்போது 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு 3 தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புரோட்டீன் பவுடர், பேரீச்சம்பழம், நெய், சத்து டானிக் உள்ளிட்டவை அடங்கிய சிறப்பு பரிசு பெட்டகம் வழங்கப்பட்டது.
கர்ப்பிணி பெண்களுக்கு செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் நலப்பொருட்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கினர். அரசு மருத்துவமனைகளின் இத்தகைய செயல்பாடுகளுக்கு கர்ப்பிணி பெண்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
Discussion about this post