மயிலாடுதுறை அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியின் போது வியாபாரிகள் தாக்கியதில் காவலர் படுகாயம் அடைந்ததால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதியில் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், வண்டிக்காரத்தெருவில் ஆக்கிரமிப்பில் இருந்த சாலையோரக் கடைகளும் அகற்றப்பட்டன. அப்போது வியாபாரிகளில் ஒருவர் தராசு எடைக்கல்லை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது வீசியுள்ளார். அதில் சிறப்பு பாதுகாப்புபடை காவலர் மணிகண்டன் என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக 4 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து, 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை மேற்கொண்டனர்.
Discussion about this post