ஊத்தங்கரை பகுதியில் மழை வேண்டி கழுதைக்கு இளைஞர் ஒருவர் தாலி கட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக போதிய மழை பொழியாததால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏரி குளங்கள் நீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. ஆடு மாடுகள் குடிக்க தண்ணீர் இல்லாமலும் விவசாயம் செய்ய முடியாததாலும் இப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில்,தீர்த்தகிரி வலசை பகுதியில் உள்ள குண்டாள அம்மன் மற்றும் குறத்தி அம்மன் ஆகிய கடவுள்களுக்கு ஊர்மக்கள் ஒன்று கூடி படையல் வைத்தனர். இதன் முக்கிய நிகழ்வாக நீண்ட நாளாக திருமணம் ஆகாத இளைஞர் ஒருவர் கழுதைக்கு தாலி கட்டி பூஜைகள் மேற்கொண்டால் இரண்டொரு நாட்களில் மழை பொழியும் என்றும் அந்த இளைஞருக்கும் உடனடியாக திருமணம் நடைபெறும் என்பதும் இப் பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனை அடுத்து இளைஞர் ஒருவர் கழுதைக்கு தாலிகட்டி வழிபாடு நடத்திய நிகழ்ச்சி வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post