தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனையை போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
தமிழகத்தில் பருவ மழை பொய்த்துப் போனதால் பல்வேறு இடங்களில் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் குடிநீர் தட்டுப்பாடு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது. கூட்டத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, வருவாய்த்துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். குடிநீர் பிரச்சனையை போக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், வரும் காலங்களில் இது போன்ற நிலை ஏற்படாமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், பிளாஸ்டிக் பயன்படுத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post