3 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் திருவாரூர் தியாகராஜர் கோயில் தெப்பத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் தேரோட்டம் நடைபெற்றது. இதையடுத்து தொடங்கிய தெப்ப திருவிழா 3 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. சுமார் சுமார் 30 டன் எடையுடனும், 26 அடி உயரம் கொண்டதெப்பம் , மின்னொளியில் ஜொலித்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் பாலசுப்பிரமணியன் உள்பட கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். இதனை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் துரை ஆகியோர் நேரில் ஆய்வு செய்த நிலையில் , ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Discussion about this post