சிறுவன் முகமது யாசினை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. சாலையில் கிடந்த பணப்பையை நேர்மையாக ஒப்படைத்ததன் மூலம் பலரின் கவனத்தையும் பெற்றான் யாசின்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் பள்ளியின் அருகே சாலை ஓரம் கேட்பாரற்று கிடந்த பை ஒன்றை கண்டான். அதனை திறந்து பார்த்தப்போது கிட்டதட்ட ரூ.50,000 மதிப்புள்ள பணம் இருந்தது. உடனடியாக அதனை ஆசிரியரிடம் கொடுக்க, அவரோ அவனை அழைத்துக்கொண்டு நேரடியாக போலீஸ் கமிஷனரிடம் அந்த பையை ஒப்படைத்தார்.
இச்செய்தி அவனுக்கு பலதரப்பு பாரட்டையும் பெற்றுக்கொடுத்தது. அவனின் நேர்மையை கண்டு வியந்த நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டி அவனின் கல்வி செலவையும் ஏற்றுக்கொண்டார்.
யாசினை நினைத்து அவனின் குடும்பமும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தது.இந்நிலையில், யாசினுக்கு புகழ் சேர்க்கும் வண்ணம் தமிழக அரசின் 2ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ‘ஆத்திசூடி’யில் வரும் நேர்பட ஒழுகு என்பதின் கீழ் முகமது யாசினின் நேர்மையான செயல் இடம் பெற்றுள்ளது.
நேர்மையாக வாழ்ந்தால் என்றென்றைக்கும் புகழ் நிச்சயம் என்பது முகமது யாசினின் செயல் நிரூபித்துள்ளது.
Discussion about this post