சென்னை அம்பத்தூரில், மக்களின் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க, 16 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கபட்டுள்ள, 4 ஆழ்துளை கிணறுகள் மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டன.
சென்னை குடிநீர் வாரியம் மண்டலம் 7- சார்பில் அம்பத்தூர் தொகுதி மக்களின் தண்ணீர் பற்றாக்குறையை கட்டுப்படுத்துவதற்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து, 16 லட்சம் செலவில் நான்கு இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. மின் மோட்டார் மூலமாக தண்ணீர் தொட்டிக்கு நீர் கொண்டு வரப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் வழங்கும் சேவையை சட்ட மன்ற உறுப்பினர் அலெக்சாண்டர் தொடங்கி வைத்தார்.
Discussion about this post