கோபிசெட்டிபாளையம் அருகே குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் புதிதாக மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைத்து நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ஜெ.ஜெ.நகர், வசந்த நகர், பனங்காட்டுகொரை, முருகுநகர், உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் கோடைகாலங்களில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் கூடுதலாக மேல்நிலை குடிநீர் தொட்டி அமைத்து தரவேண்டி தமிழக அரசிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிட்டில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
Discussion about this post