தேசிய தொங்கு இழை விளையாட்டுப்போட்டிகளில் 36 பதக்கங்களை வென்ற தமிழக வீரர்களை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் சந்தித்து பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.
உத்திர பிரதேசம் மாநிலம் ஜான்சியில், கடந்த மாதம் 30-ஆம் தேதி முதம் இம்மாதம் 1ஆம் தேதி வரை, 2-வது தேசிய தொங்கு இழை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு, ஆந்திரா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கு பெற்றனர். இதில், தமிழகத்தில் இருந்து மொத்தம் 59 வீரர்கள் பங்கு பெற்றனர். அதில், தமிழ்நாடு சார்பில் 12 தங்கம்,19 வெள்ளி மற்றும் 5 வெண்கல பதக்கங்களுடன், மொத்தம் 36 பதங்கங்களை வென்று, தேசிய அளவில் தமிழக மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். வெற்றியோடு தமிழகத்திற்கு வந்த வீரர்களை, தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் அழைத்து பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார். விளையாட்டு வீரர்களுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் தனிப்பட்ட முறையில் பல்வேறு உதவிகளை செய்துவருவதாக வெற்றி பெற்ற வீரர்கள் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துகொண்டனர்.
Discussion about this post