மதுரை மத்திய சிறையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதி, தண்டனை கைதி என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த கைதிகளில் சிலர் சிறைக்குள் கஞ்சா, செல்போன் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து உதவி ஆணையர் தலைமையில் மதுரை மத்திய சிறைச்சாலையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனையில் அவருடன் ஆய்வாளர்கள், சிறப்பு ஆய்வாளர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இதில், கஞ்சா, செல்போன்கள் போன்றவற்றை கைதிகள் வைத்திருக்கிறார்களா என்று சோதனை நடந்து வருகிறது. அவர்கள் சிறை வளாகம், கழிவறைகள், கைதிகளின் அறைகள், சமையல் கூடம் ஆகியவற்றில் சோதனை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post