தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விவசாயிகள் , கடந்த வாரம் தாமிரபரணியில் வெள்ளம் ஏற்பட்ட போது , அந்த தண்ணீரை குளங்களுக்கு அனுப்பவில்லை என்று புகார் தெரிவித்தனர். இதனால், உபரி நீர் கடலில் கலந்ததாக குற்றம்சாட்டிய அவர்கள், ஸ்ரீவைகுண்டம் மற்றும் முக்காணி பகுதிகளில் தடுப்பணையும், கதவணையும் கட்டினால் வெள்ள நீரை சேமிக்கலாம் என்று தெரிவித்தனர்.
Discussion about this post