ஆண்டின் 365 நாட்களும் மக்களின் நன்மைக்காக பணி செய்யும் கட்சி பாஜக என கேரள மாநிலம் குருவாயூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் குருவாயூரில் சாமி தரிசனம் செய்த பின்பு குருவாயூரின் பாஜக தொண்டர்கள் இடையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மத்தியில் ஆட்சி நடத்துவது மட்டுமின்றி உலகளவில் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியாவை மாற்றுவதே பாஜகவின் லட்சியம் என்று தெரிவித்துள்ளார்.
மக்களின் பிரதிநிதிகளாக மக்கள் தங்களை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் ஆனால், வாழ்நாள் முழுவதும் மக்களின் சேவகர்களாக இருந்து பணிபுரிய காத்திருப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், வெற்றியானாலும், வீரதீர செயல்களானாலும் பாஜக தொண்டர்களின் பங்களிப்பு இன்றி சாத்தியப்படாது என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, தங்களை வெற்றி பெற செய்தவர்கள் மட்டுமின்றி தங்களுக்கு வாக்களிக்காதவர்களும் தங்களுக்கு முக்கியம் என்று தெரிவித்தார்.
Discussion about this post