ஈரோடு திம்பம் மலைப்பகுதியில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதில் கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் இருந்து குளித்தலைப் பகுதிக்கு மலையாளம் என்னும் ஓட்டுநர் அரிசி லோடுடன் லாரியை ஓட்டி கொண்டு வந்தார்.
அப்போது 25-ஆவது கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உடனடியாக மீட்கபட்ட ஓட்டுநர் மலையாளத்தை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post