கீழ்பென்னாத்தூர் அடுத்த வழுதலங்குணம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த குளத்தை தூர் வார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வழுதலங்குணம் கிராமத்தில் பழமை வாய்ந்த குளம் உள்ளது. இந்த குளம் வறட்சியான காலங்களிலும் தண்ணீர் வற்றாமல் இருந்து வருகிறது. அப்பகுதி மக்கள் குடிநீருக்காகவும் இந்த குளத்தை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. தற்போது, இந்த குளம் பராமரிப்பின்றி மசடைந்து காணப்படுவதாக தெரிகிறது. இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் குளத்தை தூர் வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post