ஈரோடு அருகே பழுதடைந்த பாலத்துக்கு பதிலாக ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டப்பட்டு வருவதால் அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து மேட்டூர் செல்லும் முக்கிய சாலையில் பூதப்பாடி என்ற இடத்தில் 53 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பாலம் பழுதடைந்து காணப்பட்டது. இதனால் கனரக வாகனங்கள் செல்லும் போது அதிர்வு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் புதிய பாலம் அமைத்துக் கொடுக்க அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மக்களின் வேண்டுகோளை பரிசீலித்த தமிழக அரசு 1 கோடியே 12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து புதிய பாலம் அமைக்க உத்தரவிட்டது. தற்போது புதிய பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால் அப்பகுதி மக்கள் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
Discussion about this post