தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சாட்டிலைட் ரிங்ரோடு அமைப்பது குறித்து பொதுமக்களிடம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தற்போது மாவட்ட தலைநகரமல்லாத முதல் மாநகராட்சி என்கிற சிறப்பம்சத்தை பெற்றுள்ளது. பெருகி வரும் வாகனங்களால் சாலை போக்குவரத்து இடையூறுகளை குறைக்கும் வகையில் பெத்தமதகொண்டப்பள்ளி முதல் தேவீரபள்ளி வரை, சாட்டிலைட் டவுன்ரிங் ரோடு அமைய உள்ளது. இச்சாலை கிராமங்கள் வழியாக தமிழக-கர்நாடக மாநிலங்களை இணைக்க உள்ளது. அதற்கான பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஓசூர் அடுத்த மத்திகிரியில் நடைப்பெற்றது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கருத்துக்களை முழுமையாக கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், அவற்றை பதிவு செய்துக்கொண்டார். மேலும் தங்களுடைய கருத்துக்களை மனுவாக சமர்பிக்க, பொதுமக்களுக்கு 3 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Discussion about this post