செங்கம் அருகே அமைந்துள்ள மாரியம்மன் ஆலயத்தில், மழை வேண்டி சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த தர்பார்பாளையம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில், மழை வேண்டி சிறப்பு யாகம் மற்றும் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஒன்பது வகையான புனித நீர் கலசங்களை வைத்து யாகசாலை பூஜைகள் செய்தனர். இதனைத் தொடர்ந்து யாக குண்டத்திற்கு புதிய செவ்வாடையில் பழ வகைகள், முந்திரி திராட்சை மற்றும் மூலிகை பொருட்களை யாகத்திற்கு உணவாக வழங்கி, யாக குண்டத்திற்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
Discussion about this post