புதுக்கோட்டை பொன்னமராவதியில் உள்ள உடையபிராட்டி அம்மன் கோவிலில் மாம்பழ தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
பொன்னமராவதி அருகேயுள்ள பொன்புதுப்பட்டி கிராமத்தில் உள்ளது இந்த உடையபிராட்டி அம்மன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாம்பழ தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், கடந்த 21 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் மண்டகப்படி நடைபெற்று வந்து நிலையில், தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டமானது, தேர்முட்டிவீதி, புதுப்பட்டி, மேலரத வீதி, நகைக்கடை பஜார் உள்ளிட்ட முக்கிய வீதிகளில் சென்று பொதுமக்கள் மீது மாம்பழங்கள் வீசப்பட்டது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் முந்தியடித்துக் கொண்டு எடுத்து சென்றனர்.
Discussion about this post