ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியும் ஒடிசாவில் நவீன் பட்நாயக்கும் முதலமைச்சர்களாக இன்று பதவி ஏற்றுக்கொள்கின்றனர்
மக்களவை தேர்தலுடன் ஆந்திரா , ஒடிசா, சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. ஆந்திராவில் நடைபெற்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 159 இடங்களில் அக்கட்சி வென்றுள்ளது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவின் புதிய முதலமைச்சராக இன்று பதவி ஏற்க உள்ளார். ஆந்திர ஆளுநர் நரசிம்மன் ஜெகன் மோகன் ரெட்டிக்கு முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். அவருடன் முக்கிய அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.
இதேபோல ஒடிசாவில் ஐந்தாவது முறையாக நவீன் பட்நாயக் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். அங்கு நடைபெற்ற தேர்தலில் பிஜு ஜனதா தளம் கட்சி மீண்டும் வெற்றி பெற்றது. இதனையடுத்து ஆளுநர் கணேஷி லால் பிஜு ஜனதா தளம் தலைவர் நவீன் பட்நாயக்கிற்கு முதலமைச்சராக இன்று பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்
Discussion about this post