மக்களவைத் தேர்தலில் தனியாகவே 303 இடங்களை கைப்பற்றி, பாஜக சாதனை படைத்துள்ளது.
பரபரப்பாக நடந்து முடிந்த 17-வது மக்களவைத் தேர்தலில், 300 இடங்களில் வெற்றி பெற்றுள்ள பாஜக, 3 இடங்களில் முன்னணியில் உள்ளது. பாஜக கூட்டணி, மொத்தம் 352 இடங்களை கைப்பற்றுகிறது. தனியாகவே 303 இடங்களை கைப்பற்றும் பாஜக, 50 ஆண்டுகளுக்குப் பிறகு, தொடர்ந்து ஆட்சியை தக்க வைக்கும் சாதனையை படைத்துள்ளது. அதோடு, 2014 ஆம் ஆண்டு, தனியொரு கட்சியாக 282 இடங்களை கைப்பற்றிய பாஜக, தற்போது சொந்த சாதனையையும் முறியடித்துள்ளது.
மறுபுறம், காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்து, எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ளது. 2014ல், தனியாக 44 இடங்களில் மட்டுமே வென்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த காங்கிரஸ், தற்போது 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், 2-வது முறை தொடர்ந்து எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கும் மோசமான சாதனையை காங்கிரஸ் படைத்துள்ளது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இணைந்து, 96 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளன.
இதற்கு அடுத்தபடியாக, திமுக கூட்டணி 23 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதில், திமுக தனியாக 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 22 இடங்களை கைப்பற்றி, 1 இடத்தில் முன்னணியில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், அந்த ஒரு தொகுதியில் வென்றால், 3-ம் இடத்தை பகிர்ந்துகொள்ளும். முதல் இரண்டு இடங்களைத் தவிர, மற்ற கட்சிகள் இணைந்து 94 இடங்களை கைப்பற்றியுள்ளன.
Discussion about this post