மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளைய தினம் எண்ணப்பட இருக்கும் நிலையில் புதிதாக கட்டுப்பாட்டு அறை ஒன்றை தேர்தல் ஆணையம் திறந்துள்ளது.
நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளில் பதிவான வாக்குகளும் ஆந்திரா, அருணாச்சல் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குகளும் நாளையதினம் எண்ணப்பட உள்ளன. அதற்கான ஏற்பாட்டு பணிகளில் தேர்தல் ஆணையம் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கைகளுக்கான சுற்றுகள், அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் ஏற்கனவே செய்துவிட்டது. இந்தநிலையில் வாக்கு எண்ணிக்கையின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏதெனும் கோளாறு ஏற்பட்டால் அது குறித்து தகவல் தெரிவிக்க டெல்லியில் 24 மணிநேரம் இயங்கக்கூடிய கட்டுபாட்டு அறை ஒன்றும் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி வாக்குப்பதிவு இயந்திரங்களின் ஏற்படும் கோளாறுகள் குறித்து 011-23052123 என்ற தொலைபேசி எண்ணுக்கு புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post