தேசிய ஜனநாயக கூட்டணி நாட்டின் எதிர்பார்ப்புகளையும் குறிக்கோள்களையும் பிரதிபலிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சித்தலைவர்களுக்கு பிரதமர் மோடி விருந்தளித்தார். முன்னதாக நாட்டின் வளர்ச்சி குறித்தும் எதிர்பார்ப்புகள் குறித்தும் பல்வேறு கட்சித்தலைவர்கள் தங்களது கருத்துகளை முன்வைத்தனர்.கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தேசிய ஜனநாகய கூட்டணி நாட்டின் எதிர்பார்ப்புகளையும் குறிக்கோள்களையும் பிரதிபலிப்பதாக தெரிவித்தார். மேலும் இந்த தேர்தலில் தான் மேற்கொண்ட பிரசாரங்கள் புனித பயணம் போல இருந்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Discussion about this post