தஞ்சையில் மன்னர் காலத்தில் வெட்டப்பட்ட சாமந்தான் குளம், சிவகங்கை குளம், அய்யன் குளங்களில், 10 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் சீரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
தஞ்சை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு திட்டப் பணிகள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. தஞ்சையில் நீர் மேலாண்மையை மேம்படுத்தும் வகையில், மன்னர்கள் காலத்தில் வெட்டப்பட்ட சிவகங்கை குளம், அய்யன்குளம், சாமந்தான் குளம் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 10 கோடியே 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது அய்யன்குளம், சாமந்தன் குளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குளத்தில் இருக்கும் குப்பைகள் அகற்றப்பட்டு, நான்கு புறமும் கான்கிரீட் தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Discussion about this post