திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து அமைச்சர்கள் இறுதிகட்ட பிரசாரத்தை மேற்கொண்டனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் பிற்பகலில் பிரசார கூட்டம் நடைபெற்றது. அப்போது வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், முனியாண்டிய ஆதரித்து பிரசாரம் செய்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மீது பொய் வழக்குகளை தொடுத்த திமுகவினர், கருணை வந்தது போல நடிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
Discussion about this post