திமுக தலைவர் ஸ்டாலின் கணக்கு வாத்தியார் போல் செயல்பட்டுக்கொண்டிருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெர்வித்துள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக்கு பிறகு விளாச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பலகையில் கூட்டல் பெருக்கல் கணக்குப் போட்டுக்கொண்டிருக்கும் ஸ்டாலினின் கனவு 23ஆம் தேதிக்கு பிறகு கழித்தல் கண்க்காக மாறிப்போகும் என்று தெரிவித்தார். மேலும் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை நிரூபிக்க தயாரா என சவால்விடும் ஸ்டாலின், பாஜகவுடன் என்ன பேசினோம் என்பதற்கு ஏன் சவால் விடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
Discussion about this post