கமலஹாசன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கான ஆதாரங்களை, ஆகஸ்ட் 2ம் தேதி தாக்கல் செய்ய டெல்லி பட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் பிரசாரத்தின் போது பேசியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், இந்து சேனா அமைப்பை சேர்ந்த விஷ்ணுகுப்தா என்பவர், கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், கமலஹாசன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கான ஆதாரங்களை ஆகஸ்ட் 2ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
Discussion about this post