மிக முக்கியமான சவாலான குற்றங்களை கண்டறிய மூன்றாவது கண் என அழைக்கப்படும் சிசிடிவி கேமராவின் பங்கு தற்போது அதிமுக்கியமாகி உள்ளது. இதுகுறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்…
சிசிடிவி கேமராக்கள் இல்லாத காலங்களில் குற்ற வழக்குகளை உடனடியாக தீர்வு காணுவதில் போலீசாரின் சாதுரியத்தை மட்டுமே துணையாகக் கொண்டு கையாண்டனர். குறிப்பாக மோப்ப நாய், தடயவியல் நிபுணர்கள், குற்றவாளியின் கைரேகை பதிவு மற்றும்
விட்டுச் சென்ற தடயங்கள், சந்தர்ப்ப சாட்சியங்களை வைத்து பல வழக்குகளில் போலீசார் தீர்வு கண்டுள்ளனர். ஆனால் அதற்கு கால அவகாசம் தேவையானதாக இருக்கும். தற்போது இந்தநிலை மாறி உள்ளது.
சிசிடிவி கேமராக்கள் என்று சொல்லப்படும் கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வதும் குறிப்பாக செல்போன் மற்றும் செயின் பறிப்பு வழிப்பறி, கொலை என அனைத்து குற்றங்களையும் உடனடியாக களைவதிலும்
குற்றவாளிகளை கண்டறிந்து நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்றுத் தருவது என இதன் பங்களிப்பு அபாரமானதாக இருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக சிசிடிவி கேமராக்கள் மூலம் ஏராளமான குற்ற வழக்குகள் உடனுக்குடன் தீர்வு காணப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்படாத நபர்களை குற்றவாளிகளாக நிற்கும் போது சிசிடிவி கேமராக்கள் மூலம் அவர்கள் நிரபராதிகள் என உண்மையை நிலை நாட்டியுள்ளது.
செல்போன்கள் பறிமுதல், நகை பறிமுதல் போன்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் தப்பிக்கும் இருசக்கர கொள்ளையர்களை தப்பவிடாமல் பிடிக்கிறது சிசிடிவி கேமராக்கள் என்றால் மிகையில்லை.
Discussion about this post