அரியலூர் அருகேயுள்ள கீழப்பழுரில் அமைந்துள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தனியார் கல்லூரிகளை விட தரமான கல்வி கிடைப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
அரியலூர் மாவட்டத்தை சுற்றி பல சிமெண்ட் ஆலைகள் இயங்கி வருவதால் அப்பகுதி மாணவர்களின் வேலை வாய்ப்பினை கருத்தில் கொண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் கடந்த 2013 ஆம் ஆண்டு கீழப்பழுரில் பாலிடெக்னிக் கல்லூரி துவங்கப்பட்டது.
இந்நிலையில் அங்கு, சிறப்பான கல்வி வழங்குவதால் வரும் கல்வியாண்டுக்கான விண்ணப்பங்கள் பெற மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த கல்லூரியில், 3 ஆண்டுகளுக்குமான கல்வி செலவு 6 ஆயிரம் ரூபாய் மட்டுமே என்பது சிறப்பம்சம் எனக்கூறும் மாணவர்கள், இலவச லேப்டாப், கல்வி உதவித்தொகை, இலவச பஸ் பாஸ், இரயில் பாஸ் என ஏராளமான அரசு சலுகைகள் கிடைக்கின்றன என கூறுகின்றனர்.
Discussion about this post