முல்லை பெரியாறு அணை அருகே உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி வாகன நிறுத்துமிடம் அமைக்க முயற்சிக்கு கேரளா மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது
முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில், வாகன நிறுத்துமிடம் அமைக்க கேரள அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, முல்லைப் பெரியாறு பகுதியில் கட்டுமானங்களை மேற்கொள்ளுவது நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் என்றும், எனவே கேரள அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. எனினும், அங்கு கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கான ஆதாரங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தமிழக அரசு, பெரியாறு புலிகள் சரணாலய இயக்குநர் உள்ளிட்ட 5 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
Discussion about this post