இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 259 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்துக்கு பிறகு அந்நாட்டில் தொடர்ந்து ஒருவித பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் இலங்கையில் வட மாகாணங்களில் ஒரு பிரிவினரின் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கடைகள் குறிவைத்து தாக்கப்பட்டு வருகின்றன. சிலாபம், குளியாபிட்டி, குருநாகல் ஆகிய மாவட்டங்களில் வன்முறை காரணமாக அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கம்பஹா மினுவாங்கொடை பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் பௌஸுல் ஹமீது என்பவர் பலியானார். இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை ராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க, வன்முறையாளர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்ய தயங்கமாட்டோம் என கூறியுள்ளார்.
Discussion about this post